/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் கால்நடைகள் பேரணி வாகன ஓட்டிகள் 'திக்திக்' பயணம்
/
நெடுஞ்சாலையில் கால்நடைகள் பேரணி வாகன ஓட்டிகள் 'திக்திக்' பயணம்
நெடுஞ்சாலையில் கால்நடைகள் பேரணி வாகன ஓட்டிகள் 'திக்திக்' பயணம்
நெடுஞ்சாலையில் கால்நடைகள் பேரணி வாகன ஓட்டிகள் 'திக்திக்' பயணம்
ADDED : ஆக 08, 2024 02:53 AM

திருவள்ளூர்:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கால்நடைகள் உலா வருவதால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
சென்னையில் இருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் இருந்து திருப்பதி, திருத்தணி செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் ஜே.என்.சாலை, கலெக்டர் அலுவலகம் வழியாக, திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கின்றன.
அபராதம்
திருவள்ளூர் பிரதான சாலைகளில், கால்நடைகள் சுற்றித்திரிவதால், அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலை மற்றும் விவசாய நிலங்களில் கால்நடைகளை திரியவிட்டால், அவற்றை பறிமுதல் செய்து, கோசாலையில் ஒப்படைக்கப்படும்.
மேலும், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இருப்பினும், திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பாச்சூர், கைவண்டூர், பாண்டூர், பட்டரைபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், கால்நடைகள் உலா வருகின்றன.
உயிரிழப்பு
இதனால், வேகமாக வரும் வாகனங்கள், கால்நடைகளால் தடுமாறி விபத்திற்குள்ளாகி வருகின்றன. இதன் காரணமாக பலர் காயமடைந்தும், ஏராளமானோர் உயிரிழந்தும் வருகின்றனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் நெடுஞ்சாலைகளில் உலா வரும் கால்நடைகளை பறிமுதல் செய்து, அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.