/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெத்தையில் பிடித்த சிகரெட் தீ ஐ.டி., ஊழியரின் உயிரை பறித்தது
/
மெத்தையில் பிடித்த சிகரெட் தீ ஐ.டி., ஊழியரின் உயிரை பறித்தது
மெத்தையில் பிடித்த சிகரெட் தீ ஐ.டி., ஊழியரின் உயிரை பறித்தது
மெத்தையில் பிடித்த சிகரெட் தீ ஐ.டி., ஊழியரின் உயிரை பறித்தது
ADDED : மார் 11, 2025 12:14 AM
கே.கே.நகர், சாலிகிராமம், விஜயராகவபுரம் 7வது தெருவில் உள்ள வீட்டில் இருந்து, நேற்று அதிகாலை அதிகளவில் புகை வந்துள்ளது.
அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள மெத்தை எரிந்த நிலையில், அருகே வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்
தகவலறிந்து வந்த '108' ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பரிசோதனையில், வாலிபர் உயிரிழந்தது தெரியவந்தது. கே.கே.நகர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் உயிரிழந்த நபர், திருவண்ணாமலை மாவட்டம், கடம்பி கிராமத்தைச் சேர்ந்த நேதாஜி, 34, என்பதும், இரண்டு ஆண்டுகளாக சாலிகிராமத்தில் தங்கி, ஐ.டி., நிறுவனத்தில்பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
திருமணமாகாத இவர், சம்பவத்தன்று மது போதையில் சிகரெட் பற்ற வைத்தபோது, மெத்தையில் தீப்பிடித்ததாக தெரிகிறது.
இதில் ஏற்பட்ட புகையால், மூச்சுத்திணறல்ஏற்பட்டு நேதாஜி உயிர் இழந்ததும் தெரியவந்தது.
மேலும், அவரது உடலிலும் சிறு தீக்காயங்கள் இருந்துள்ளன. சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.