/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமூக நலத்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை
/
சமூக நலத்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை
ADDED : ஆக 15, 2024 08:05 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்தது.
சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று, சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணியின் செயல்பாடு குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின், தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மத்திய அரசின் மாவட்ட மகளிர் அதிகார மையம் மற்றும் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம் இணையதள பக்கத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், இயக்குனர் அமுதவல்லி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனர் மெர்சி ரம்யா, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை இயக்குநர் டாமி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

