/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஐ.பி.எல்., சூதாட்டத்தில் தொடர்பு போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
/
ஐ.பி.எல்., சூதாட்டத்தில் தொடர்பு போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ஐ.பி.எல்., சூதாட்டத்தில் தொடர்பு போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ஐ.பி.எல்., சூதாட்டத்தில் தொடர்பு போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 01, 2024 10:11 PM
சென்னை:சென்னை, யானைகவுனி காவல் நிலைய எல்லையில் உள்ள, பெருமாள் முதலி தெருவில், மர்ம நபர்கள், ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என, தகவல் வெளியானது. இதையடுத்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க், இரண்டு தனிப்படைகளை அமைத்து, விசாரணையை முடுக்கி விட்டார்.
யானைகவுனி இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து, சவுகார்பேட்டையைச் சேர்ந்த சந்தீப், 33, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
அதேபோல், ஏழுகிணறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், பெங்களூரில் பதுங்கி இருந்த இருவரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். ஆறு பேரும், காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
தொடர் விசாரணையில், யானைகவுனி காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டரின் சிறப்புக் குழுவில் உள்ள கான்ஸ்டபிள் காமேஷ், ஐ.பி.எல்., சூதாட்ட கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர், நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மேலும் சில காவலர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

