/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காப்பர் ஒயர் திருட்டு 3 பேருக்கு 'காப்பு'
/
காப்பர் ஒயர் திருட்டு 3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஆக 28, 2024 09:07 PM
ஊத்துக்கோட்டை:எண்ணுார் -- மாமல்லபுரம் இடையே ஆறு வழிச்சாலை பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வெங்கல் அருகே கீழானுார் பகுதியில் புதிய சாலைப் பணி மற்றும் மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
இதில், அணைக்கட்டு மேம்பாலத்தில் சோதனை செய்த போது, அங்கு பொருத்தப்பட்டு இருந்த, 500 மீட்டர் காப்பர் ஒயர் திருடுபோனது தெரிந்தது.
இதுதொடர்பாக, கட்டுமான பணி மேலாளர் சுரேஷ், வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிந்த போலீசார் விசாரித்து வந்தனர்.
நேற்று இரவு தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில், வெங்கல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், நிற்காமல் வேகமாக சென்றது.
துரத்தி சென்று இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர். அதில் பயணித்த மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், தாமரைப்பாக்கம் குணசேகரன், 23, ஆகாஷ், 21, பாகல்மேடு ஆகாஷ், 23, என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 500 மீட்டர் காப்பர் ஒயரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.