/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
/
பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2024 09:42 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில் பூங்கா ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
திருவள்ளூர் நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடந்தது.
துணை தலைவர் ரவிச்சந்திரன், கமிஷனர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளில், பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
அவற்றை மீட்டு, 'காம்பவுன்ட்' எழுப்ப வேண்டும். விடுப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்பது உள்ளிட்ட, அடிப்படை வசதி கோரி வலியுறுத்தினர்.
பல்வேறு நலத்திட்ட பணி உள்பட, 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.