/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் கிரிக்கெட் போட்டி
/
ஊத்துக்கோட்டையில் கிரிக்கெட் போட்டி
ADDED : மே 08, 2024 12:07 AM

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சார்பில் மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 26 அணியினர் பங்கேற்றன. இறுதி போட்டியில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை சி ஆகிய அணிகள் மோதின. இதில் திருவள்ளூர் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வழக்கறிஞர் சங்க தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.
கும்மிடிப்பூண்டி தி.மு.க.,- -- எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன், முதலிடம் பிடித்த திருவள்ளூர் அணி, 2ம் இடம் பிடித்த ஊத்துக்கோட்டை சி அணி, மூன்றாமிடம் பிடித்த பொன்னேரி அணிக்கு பரிசு கோப்பை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.

