/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆசானபூதுாரில் சிறுபாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
ஆசானபூதுாரில் சிறுபாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ஆசானபூதுாரில் சிறுபாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ஆசானபூதுாரில் சிறுபாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : மே 02, 2024 01:48 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் இருந்து ஆசானபூதுார் கிராமத்திற்கு செல்லும் சாலையில், ஓடைக்கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில், குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு, அவை சரிவர மூடப்படாமல் உள்ளது. பாலத்தின் தடுப்புச்சுவரும் சேதமடைந்து உள்ளது.
பாலத்தின் பக்கவாட்டு பகுதிகள் பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். இரவு நேரங்களில் நடந்து செல்லும் கிராமவாசிகள் பள்ளம் இருப்பதை அறியாமல், கால்இடறி விழுகின்றனர்.
ஆசானபூதுார், வஞ்சிவாக்கம், மடிமைகண்டிகை, பெரும்பேடு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த பாலத்தை கடந்து சென்று வரும் நிலையில், பாலம் பராமரிப்பு இன்றி கிடப்பது கிராமவாசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சேதமடைந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து அசம்பாவிதங்கள் நேரிடும் முன், அதை சீரமைத்து, இருபுறமும் தடுப்பச்சுவர்கள் அமைக்க, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

