/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் கிராம மக்கள் அச்சம்
/
சேதமடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் கிராம மக்கள் அச்சம்
ADDED : செப் 08, 2024 12:55 AM

திருவாலங்காடு:திருத்தணி தாலுகா, மணவூர் குறுவட்டத்திற்கு உட்பட்டது ராஜபத்மாபுரம் கிராமம். இங்கு ஒருங்கிணைந்த வளாகத்தில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் தற்போது கூரை, சுவர்கள் சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்து வருகின்றன.
இதனால் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சான்றிதழ், நிலம், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட சேவைகளை பெற வரும் மக்கள் அலுவலகத்திற்குள் வர அச்சப்படுகின்றனர்.
கிராமத்தின் வருவாய் ஆவணங்கள் மற்றும் மக்களுக்கான சேவையை வழங்கும் கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதால் சேதமடைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் விபத்துக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே பழுதடைந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.