/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே மேம்பால அணுகு சாலைக்காக பொன்னேரியில் குடியிருப்புகள் இடித்து அகற்றம்
/
ரயில்வே மேம்பால அணுகு சாலைக்காக பொன்னேரியில் குடியிருப்புகள் இடித்து அகற்றம்
ரயில்வே மேம்பால அணுகு சாலைக்காக பொன்னேரியில் குடியிருப்புகள் இடித்து அகற்றம்
ரயில்வே மேம்பால அணுகு சாலைக்காக பொன்னேரியில் குடியிருப்புகள் இடித்து அகற்றம்
ADDED : ஏப் 01, 2024 07:04 AM

பொன்னேரி : சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பெரியகாவணம் பகுதியில், எல்.சி., 26 எண் கொண்ட ரயில்வே கேட் உள்ளது.
இது புதுவாயல் - சின்னகாணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. புதுவாயல், ஏலியம்பேடு, பெரியகாவணம், குண்ணம்மஞ்சேரி பகுதிகளை சேர்ந்தவர்கள் பொன்னேரி மற்றும் பழவேற்காடு செல்வதற்கு பொதுமக்கள் இந்த ரயில்வே கேட்டை பயன்படுத்துகின்றனர்.
கடந்த, 2022ல் ரயில்வே நிர்வாகத்தின் வாயிலாக இங்கு மேம்பாலம் கட்டப்பட்டு, இருபுறமும் அணுகு சாலைக்கான பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தது.நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அணுகு சாலை பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு, 59.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
அதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக கடந்த மாதம் ஒப்பந்தம் விடப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த அணுகு சாலையானது, 31.5மீ அகலம் மற்றும், இருபுறமும், 948 மீ. நீளத்தில் அமைகிறது. பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தனிப்பாதை, மழைநீர் செல்வதற்கு கால்வாய் உள்ளிட்டவைகளும் அமைய உள்ளன.
அணுகு சாலை அமையும் பகுதிகளில் இடையூறாக உள்ள குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த, இரு தினங்களாக இடையூறு கட்டடங்களை ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

