/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிக்கப்படாத கோவில் குளம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
பராமரிக்கப்படாத கோவில் குளம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
பராமரிக்கப்படாத கோவில் குளம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
பராமரிக்கப்படாத கோவில் குளம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 29, 2024 02:04 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு எதிரே உள்ள சிறிய மலையில், யோக அனுமன் வீற்றிருக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக விளங்கும் இங்கு, யோக நரசிம்மர் மலையடிவாரத்தில் ரோப்கார் வளாகத்திற்கு செல்லும் வழியில், பக்த பிரகலாதன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் எதிரே குளம் ஒன்றும் உள்ளது. இந்த குளம் பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகிறது. படிகள் புதர் மண்டிக் கிடக்கின்றன. இதனால், குளத்து நீரை பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், குளத்தின் தெற்கு கரையை ஒட்டி, ரோப்கார் வளாகத்திற்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இங்குள்ள கரையின் தடுப்புச்சுவர் உயரம் குறைவாக உள்ளது.
இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, குளத்தை சீரமைத்து, சுற்றுச்சுவரை பலப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.