/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஆக 05, 2024 02:19 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிப்பட்டு செல்வர். நேற்று வார விடுமுறையான ஞாயிறு மற்றும் ஆடி மாதம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை, 5:00 மணி முதலே மலைக்கோவிலில் குவிந்தனர்.
அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், பக்தர்கள் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். மேலும், 100 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவர் முருகபெருமானை வழிபட்டனர்.
குரங்குகள் தொல்லை
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தேங்காய் அர்ச்சனை பொருட்களுடன் சென்று, உற்சவர் முருகர் சன்னிதியில் சிறப்பு பூஜை நடத்தி வழிப்படுகின்றனர்.
மலைக்கோவில் வளாகம், தேர்வீதி, பொதுவழி தரிசனம், சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் கோவில் உட்புறத்தில் உள்ள கொடி மரம் ஆகிய இடங்களில், 70க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வருகின்றன.
பக்தர்கள் அர்ச்சனைக்காக கொண்டு வரும் தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை குரங்குகள் பறித்து செல்கின்றன. மேலும் குழந்தைகள் கைகளில் வைத்திருக்கும் தின்பண்டங்களையும் குரங்குகள் பறித்துக் கொள்கின்றன. பக்தர்கள் விரட்டும் போது கடிக்கிறது.
கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில் அதிகளவில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.