/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்த கட்டட வளாகம் பூண்டி ஒன்றிய ஊழியர்கள் பீதி
/
பாழடைந்த கட்டட வளாகம் பூண்டி ஒன்றிய ஊழியர்கள் பீதி
பாழடைந்த கட்டட வளாகம் பூண்டி ஒன்றிய ஊழியர்கள் பீதி
பாழடைந்த கட்டட வளாகம் பூண்டி ஒன்றிய ஊழியர்கள் பீதி
ADDED : மே 02, 2024 01:50 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் உருவாகி, அங்கு அலுவலகம் கட்டப்பட்டது. தற்போது, இந்த கட்டடம் உரிய பராமரிப்பின்றி, பாழடைந்து காட்சியளிக்கிறது.
இதையடுத்து, இந்த கட்டடத்தின் பின்புறம் புதிய அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு, ஒன்றிய அலுவலர்கள் - வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலர் அறைகள், ஒன்றியக் குழு தலைவர் அறை மற்றும் கூட்ட அரங்கு, அலுவலர்கள் பணிபுரியும் அறை செயல்பட்டு வருகிறது.
இருப்பினும், ஒன்றிய அலுவலகத்தின் முகப்பில் பாழடைந்துள்ள கட்டடத்தில் இருந்து பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், புதிய அலுவலகத்திற்குள் புகுந்து விடுவதால், ஊழியர்கள் கடும் அச்சத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே, பாழடைந்த பழைய கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

