/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முருக்கம்பட்டு கோவிலில் தீமிதி விழா
/
முருக்கம்பட்டு கோவிலில் தீமிதி விழா
ADDED : ஆக 19, 2024 11:03 PM
திருத்தணி: திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பகுதியில் மன்னாதீஸ்வரர் பச்சையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடக்கும் தீமிதி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
அந்த வகையில் நடப்பாண்டிற்கான தீமிதிவிழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் அம்மன் திருவீதியுலாவும், மகா பாரத நாடகமும் நடந்து வந்தது.
நிறைவு நாளான நேற்று தீமிதி விழா நடந்தது. காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
மாலை, 6:00 மணிக்கு நடந்த தீமிதி விழாவில், 500க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர்.
இதில், முருக்கம்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிப்பட்டனர். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்.

