/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பரிக்குப்பட்டு கால்வாய் தடுப்பணை சேதம் கோடைக்கு முன்பே வறண்டதால் அதிருப்தி
/
பரிக்குப்பட்டு கால்வாய் தடுப்பணை சேதம் கோடைக்கு முன்பே வறண்டதால் அதிருப்தி
பரிக்குப்பட்டு கால்வாய் தடுப்பணை சேதம் கோடைக்கு முன்பே வறண்டதால் அதிருப்தி
பரிக்குப்பட்டு கால்வாய் தடுப்பணை சேதம் கோடைக்கு முன்பே வறண்டதால் அதிருப்தி
ADDED : பிப் 27, 2025 01:04 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, பெரியகாவணம், கூடுவாஞ்சேரி, பரிக்குப்பட்டு, உப்பளம், மடிமைகண்டிகை வழியாக ஏரிகளுக்கு மழைநீர் செல்லும் ஓடைக்காய் அமைந்து உள்ளது.
பரிக்குப்பட்டு கிராமத்தில் இந்த கால்வாயின் குறுக்கே, மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக தடுப்பணை கட்டப்பட்டது.
மழைக்காலங்களில் தடுப்பணையில் தேங்கும் மழைநீர், விவசாயத்திற்கும் பயன்படுவதுடன், நிலத்தடி நீர் பாதுகாக்கபட்டது.
மேற்கண்ட தடுப்பணை தொடர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததால், முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் தடுப்பணையில் மழைநீர் தேங்க வழியின்றி உடைப்பு மற்றும் ஓட்டைகள் வழியாக வெளியேறி விடுகிறது.
கடந்த ஆண்டு பருவமழையின்போது தடுப்பணையில் தேங்கிய மழைநீர் முழுதும் உடைப்புகள் வழியாக வெளியேறிவிட்டது. கோடைக்கு முன்பே தடுப்பணையும், ஓடைக்கால்வாயும் வறண்டு கிடப்பது விவசாயிகள் இடையே அதிருப்திய ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
தடுப்பணை இருக்கும்போது கால்வாய் மழைநீர் தேங்கி இருக்கும். இது கோடைகால பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
தற்போது, தடுப்பணையில் தண்ணீர் வறண்டு கிடப்பதால், விவசாயமும் கேள்விக்குறியாகிவிட்டது. சேதமடைந்த தடுப்பணையை முழுமையாக அகற்றிவிட்டு, புதியது அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.