/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிராமங்களுக்கு செல்லும் குழாய்கள் உடைப்பால் வீணாகும் குடிநீர்
/
கிராமங்களுக்கு செல்லும் குழாய்கள் உடைப்பால் வீணாகும் குடிநீர்
கிராமங்களுக்கு செல்லும் குழாய்கள் உடைப்பால் வீணாகும் குடிநீர்
கிராமங்களுக்கு செல்லும் குழாய்கள் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 24, 2025 11:59 PM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த, ஆலாடு கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து, சிவபுரம், பூதுார், கொளத்துார், மனோபுரம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.
இதற்காக, ஆலாடு - ரெட்டிப்பாளையம் இடையே, 8 கி.மீ., தொலைவிற்கு பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, நாள் முழுதும் குடிநீர் சாலைகளில் வழிந்தோடிய நிலையில் இருக்கிறது.
மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் குழாய் பராமரிப்பு பணிகளில் சரிவர கவனம் செலுத்துவதில்லை என, கிராமவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
ஆலாடு - ரெட்டிப்பாளையம் இடையே, 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறி வருகிறது.
ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது.
உடைப்புகள் வழியாக வெளிக்கழிவுகள் குடிநீருடன், கலந்து அதை பயன்படுத்தும் கிராமவாசிகளின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. குழாய் உடைப்புகளை உடனடியாக சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.