ADDED : ஏப் 11, 2024 08:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில் வசித்தவர் நாகரத்தினம், 38. கழிவுநீர் டேங்கர் லாரி டிரைவர்.
மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். கடந்த மூன்று நாட்களாக வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடி தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் போதை அதிகமாக, வலிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

