/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசை கோவில் குளத்தில் கழிவுநீர்
/
திருமழிசை கோவில் குளத்தில் கழிவுநீர்
ADDED : ஆக 29, 2024 11:18 PM

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 40.60 கோடி ரூபாய் செலவில், 2007ல்ஆண்டு சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் துவங்கப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு நிறைவடைந்தது.
நிறைவடைந்து ஐந்தாண்டுகள் ஆகியும் இன்று வரை பாதாள சாக்கடை பல பகுதியில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.
இதில் ஜெகந்நாத பெருமாள் கோவில் தெற்கு மாடவீதியில் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர் அப்பகுதியில் கோவில் குளத்தில் சேகரமாவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இவ்வழியே செல்லும் பகுதிவாசிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.