/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்: சேர்மன்
/
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்: சேர்மன்
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்: சேர்மன்
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்: சேர்மன்
ADDED : பிப் 24, 2025 02:11 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
குறிப்பாக, அரசு விடுமுறை, வார விடுமுறை நாட்கள் மற்றும் திருமண முகூர்த்தம் ஆகிய நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிவதால், மலைப்பாடைதயில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் கடும் சிரமப்படவேண்டியுள்ளது. இதுதவிர தற்போது வெயில் கொளுத்துவதால் தேர்வீதியில் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து பொதுவழி மற்றும் சிறப்பு வழி தரிசனத்தில் மூலவரை வழிப்பட வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் நேற்று, திருத்தணி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, கண்காணிப்பாளர் சித்ராதேவி ஆகியோர் மலைக்கோவில் வளாகம் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழி மற்றும் வெளியே செல்லும் வழி, சிறப்பு தரிசன போன்ற இடங்களை ஆய்வு செய்தனர். அறங்காவலர்கள் மோகனன், சு ரேஷ்பாபு, நாகன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், தேர்வீதிக்கு வரும் பாதையில், பக்தர்களுக்கு இடையூறாக சிலர் கூடைகளில் பழங்கள் விற்பனை செய்து வந்ததை பார்த்து அகற்றம் செய்தனர். பின். நாவிதர்கள் சங்கம் நன்கொடை வாயிலாக, மின்சப்ளை எந்த இடத்தில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியும் நவீன மின்சார பேனல் அமைத்தும் நேற்று கோவில் அதிகாரிகள் திறந்து வைத்தனர்.
கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன் கூறியதாவது:
கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு இல்லாமல் பொதுவழி மற்றும் சிறப்பு கட்டண தரிசனம் செய்வதற்கு தடுப்பு கம்பிகளின் உயரம் உயர்த்தப்படும். இதனால் பக்தர்கள் தடுப்பு வேலி தாண்டுவது தடுக்கப்படும்.
மூலவரை தரிசனம் செய்த பின் பக்தர்கள் வெளியே வருவதால் ஒரு வழியுள்ளதால் சிரமப்படுகின்றனர். ஆகையால் இருவழியாக மாற்றப்படும். தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், பொது மற்றும் சிறப்பு தரிசன வழியில், பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், குழாய்கள் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
தேர்வீதியில் வெயில் காத்திருக்கும் பக்தர்களின் நலன்கருதி கூடுதலாக நிழற்குடைகள் ஏற்படுத்தியும் வெயில் காலம் முடியும் வரை நீர்மோர், வெல்லப்பானகம் தொடர்ந்து வழங்கப்படும்.
நடைபாதை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகள் அகற்றப்படும். மேலும் கடைக்காரர்கள் உள்ளே வராத அளவுக்கு இரும்பு தடுப்பு அமைக்கப்படும். ஏலம் எடுத்த கடைகள் முன் பக்தர்கள் காலணிகள் விடுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.