/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்காடு குப்பத்தில் கசிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
ஆற்காடு குப்பத்தில் கசிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆற்காடு குப்பத்தில் கசிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆற்காடு குப்பத்தில் கசிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 02, 2024 06:56 AM

திருவாலங்காடு: திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பம் பா.ஜ., கவுன்சிலர் கவுசல்யா சரவணன் பங்கேற்று, வருவாய் கோட்டாட்சியர் தீபாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
ஆற்காடுகுப்பம் ஏரிக்கு வரும் கசிவுநீர்வரத்து கால்வாயை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து மண்சாலையாக மாற்றியுள்ளார்.
அதே போல் லட்சுமாபுரம் கொசஸ்தலையாற்றில் இருந்து ஆற்காடு குப்பம் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய், 300 அடி அகலம், ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளால் 15 அடி அகலமாக சுருக்கியுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என மனு அளித்திருந்தார். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கனகம்மாசத்திரம் வருவாய் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான வருவாய் துறையினர் நேற்று தனிநபர் ஆக்கிரமித்து மண்கொட்டி சாலையாக மாற்றப்பட்ட கசிவுநீர் கால்வாயை மீட்டு நீர் செல்லும் வகையில் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக கால்வாயை சீரமைத்தனர்.