/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மும்முனை மின்சாரம் வினியோகம் நேரம் குறைப்பால் விவசாயிகள் அவதி
/
மும்முனை மின்சாரம் வினியோகம் நேரம் குறைப்பால் விவசாயிகள் அவதி
மும்முனை மின்சாரம் வினியோகம் நேரம் குறைப்பால் விவசாயிகள் அவதி
மும்முனை மின்சாரம் வினியோகம் நேரம் குறைப்பால் விவசாயிகள் அவதி
ADDED : மே 07, 2024 06:39 AM
திருத்தணி: திருத்தணி அடுத்த மாமண்டூர் துணை மின்நிலையத்தில் இருந்து மாமண்டூர், அருங்குளம், லட்சுமாபுரம், குன்னத்துார், அருங்குளம் கண்டிகை, நாபளூர் உள்பட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகள் அதிகளவில், நெல், காய்கறி, பூ மற்றும் வேர்க்கடலை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாமண்டூர் துணை மின்நிலையத்தில் இருந்து விவசாய மின் இணைப்புக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்யவில்லை.
குறிப்பாக, மின்மோட்டார்கள் இயக்குவதற்கு தேவையான மும்முனை மின்சாரம் வினியோகம் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, இரவு 10:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
அதேபோல, பகல் நேரத்தில் ஆறு மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஆனால், கடந்த சில நாட்களாக, இரவில் 5 மணி நேரமும், பகலில் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்குவதால் விவசாயிகள் தங்களது மின்மோட்டார்களை இயக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, மின்வாரிய உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.