/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்த விவசாயிகள் காத்திருப்பு
/
வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்த விவசாயிகள் காத்திருப்பு
வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்த விவசாயிகள் காத்திருப்பு
வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்த விவசாயிகள் காத்திருப்பு
ADDED : ஆக 21, 2024 08:53 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் ஏரி, குளங்கள் என நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் உள்ளன.
முறையாக துார்வாரி, கரைகளை பலப்படுத்தினால் மட்டுமே பருவ மழைநீரை வீணடிக்காமல் சேமிக்க முடியும்.
அதுபோல், வெள்ள காலங்களில் மழைநீர் வீணாக கடலில் கலக்காமல், நீர்நிலைகளில் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். இதை கருத்தில் கொண்டு ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக திருத்தணி தாலுகாவில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் எடுக்க 14 விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். தற்போது ஏரிகளில் மழைநீர் நிரம்பி உள்ளதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அனுமதி கிடைத்தாலும் குறித்த காலத்தில் மண் எடுக்க முடியாத நிலை உள்ளதாக குமுறுகின்றனர்.
தற்போது விண்ணப்பித்து மண் எடுக்க அனுமதி கிடைத்தால் ஒருமாத கால அவகாசத்தில் மண் எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளதால் மழைநீர் நீர்நிலைகளில் உள்ளதால் மண் எடுக்க முடியாத சூழல் உள்ளது. எனவே மண் எடுக்க காலநீடிப்பை திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.