/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'ரிவர்ஸ்' வந்த கார் மோதி தந்தை - மகன் படுகாயம்
/
'ரிவர்ஸ்' வந்த கார் மோதி தந்தை - மகன் படுகாயம்
ADDED : செப் 17, 2024 09:33 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடைச் சேர்ந்தவர் பிரபு, 40. இவர், நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாத தன் 15 வயது மகனை, 'பஜாஜ் டிஸ்கவர்' இருசக்கர வாகனத்தில், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
பராசங்குபுரம் ஐ.டி.ஐ., அருகே, கார் ஒன்று 'ரிவர்ஸ்' வந்த போது, இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த இருவரும், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, பிரபு மனைவி சசிகலா கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.