/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீன் வளம் குறைவால் தொடரும் நஷ்டம் மீனவர்கள் வேதனை
/
மீன் வளம் குறைவால் தொடரும் நஷ்டம் மீனவர்கள் வேதனை
ADDED : ஆக 18, 2024 11:00 PM

காசிமேடு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், நேற்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின.
வஞ்சிரம், வாளை, கிளிச்ச, சங்கரா உள்ளிட்ட மீன்களின் வரத்து இருந்தது. ஆனால், கடந்த வாரங்களை போல எதிர்பார்த்த அளவிற்கு இல்லை; ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், விலை உயர்ந்து காணப்பட்டது.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
கடலில் மீன்வளமே இல்லை. கடந்தாண்டு இந்த சீசனில் கிளிச்ச, வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகம் இருந்தது. இந்தாண்டு சிறிய மீன்களின் வரத்து மட்டுமே உள்ளது. அவற்றின் வரத்தும், இரண்டு வாரங்களாக குறைந்துள்ளது.
படகிற்கு 6.50 லட்ச ரூபாய்க்கு டீசல், 60 ஆயிரம் ரூபாய்க்கு ஐஸ், 40 ஆயிரம் ரூபாய்க்கு உணவு பொருட்கள், தண்ணீர் என, 7.5 லட்ச ரூபாய் செலவு செய்து, 15 நாள் தங்கி மீன்கள் பிடித்து வரும் மீனவர்களுக்கு, 6 லட்ச ரூபாய்க்கு கூட மீன்கள் விற்பனையாவது இல்லை.
படகிற்கு 2 லட்ச ரூபாய் நஷ்டமே ஏற்படுகிறது. கடல் மாசடைந்து, மீன் வளம் குறைந்து காணப்படுகிறது.
இதை மீன்வள துறை அதிகாரிகள் கவனத்தில் வைத்து, மீன்வளம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.