/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் 4 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்
/
பழவேற்காடில் 4 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்
பழவேற்காடில் 4 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்
பழவேற்காடில் 4 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்
ADDED : ஆக 10, 2024 11:03 PM
பழவேற்காடு: பழவேற்காடு கடல் பகுதியில் வெளிமாவட்ட விசைப்படகுகளில் வரும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.
கடந்த, 5ம் தேதி, பழவேற்காடு கூனங்குப்பம் மீனவர்கள் தொழிலுக்கு சென்றபோது, அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த விசைப்படகு மீனவர்களுடன் பிரச்னை ஏற்பட்டது.
இதில், கூனங்குப்பம் மீனவர்கள், இருவர் தாக்குதலுக்கு ஆளாகியதால், பழவேற்காடில் பதற்றம் ஏற்பட்டது. மீனவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலம், கீழக்கரையைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், 10பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த, 6ம் தேதி முதல் பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்த்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
மீன்வளத்துறை அதிகாரிகள், காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களிடமும், இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். கடலோர காவல் படையினரும் கடந்த, நான்கு நாட்களாக கடல்பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகள் வருவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
அதையடுத்து பழவேற்காடு மீனவர்கள் நான்கு நாட்களுக்குப் பின், நேற்று மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு சென்றனர்.