/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வருமானத்திற்கு அதிகமாக சொத்து மாஜி கோட்டாட்சியருக்கு 3 ஆண்டு
/
வருமானத்திற்கு அதிகமாக சொத்து மாஜி கோட்டாட்சியருக்கு 3 ஆண்டு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து மாஜி கோட்டாட்சியருக்கு 3 ஆண்டு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து மாஜி கோட்டாட்சியருக்கு 3 ஆண்டு
ADDED : மார் 13, 2025 10:55 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர் அருணாச்சலம், 72. இவரது மனைவி லலிதா, 62, அருணாச்சலம் இவர் 2007- 08ல் திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்துள்ளார். அந்த காலக்கட்டங்களில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் வருமானத்திற்கு அதிகமாக 69 லட்சம் ரூபாயில் அசையும், அசையா சொத்துக்களை தன் மனைவி லலிதா பெயரில் வாங்கியது தெரிந்தது.
இதையடுத்து தம்பதி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீனாட்சி நேற்று அளித்த தீர்ப்பில், அருணாச்சலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் அருணாசலம் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் இருவருக்கும் 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.