/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நான்கு ஊராட்சிகளுக்கு குப்பை அள்ள பேட்டரி வாகனம்
/
நான்கு ஊராட்சிகளுக்கு குப்பை அள்ள பேட்டரி வாகனம்
ADDED : ஆக 09, 2024 10:43 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு 42 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் குப்பைகள் அள்ள துாய்மை பணியாளர்கள் குறைந்தது 3 முதல் 11 பேர் வரை பணியில் உள்ளனர்.
மேலும் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஊராட்சிகளில் குப்பை சேகரித்து அகற்றுவது சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஊராட்சிகளில்குப்பையை அகற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் குப்பை அள்ளும் பணியை எளிமையாக்க, 'பேட்டரி' பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நேற்று திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்தில் சிவாடா, தாழவேடு, பூனிமாங்காடு, நல்லாட்டூர் உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளுக்கு தலா ஒரு பேட்டரி வாகனங்களை திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா விஜயராகவன் வழங்கினார். பி.டி.ஓ., மகேஸ்வரி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.