/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பதி பாதையாத்திரை பக்தர்கள் தங்க மண்டபம்
/
திருப்பதி பாதையாத்திரை பக்தர்கள் தங்க மண்டபம்
ADDED : செப் 14, 2024 08:26 PM
திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான சோளீஸ்வரர் திருக்கோவில் கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடு குப்பத்தில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு, திருத்தணி, ஆற்காடுகுப்பம், லட்சுமாபுரம், நெடும்பரம், ராமலிங்கபுரம், இலுப்பூர், இல்லத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
இங்கு பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாற மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஒராண்டுக்கு முன் சோளீஸ்வரர் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. 3 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான டெண்டர் ஆன்லைன் வாயிலாக 9ம் தேதி விடப்பட்ட நிலையில் வரும், 24ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் மாலை, 5:00 மணியளவில் அதிக தொகைக்கு டெண்டர் எடுத்தவருக்கு பணி வழங்கப்படும்.
டெண்டர் விடப்பட்டு ஓராண்டுக்குள் மண்டபம் கட்டும் பணி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக திருத்தணி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.