/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோவில் குட்கா கடத்தியவர் கைது 709 கிலோ பறிமுதல்
/
ஆட்டோவில் குட்கா கடத்தியவர் கைது 709 கிலோ பறிமுதல்
ஆட்டோவில் குட்கா கடத்தியவர் கைது 709 கிலோ பறிமுதல்
ஆட்டோவில் குட்கா கடத்தியவர் கைது 709 கிலோ பறிமுதல்
ADDED : செப் 10, 2024 10:37 PM
திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி மற்றும் சிவாடா வழியாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வாகனங்கள் மூலம் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உத்தரவின்படி நேற்று கனகம்மாசத்திரம் போலீசார் சிவாடா பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது ஆட்டோவில் வெங்காயத்திற்கு அடியில், 709 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடித்தனர். பின் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குட்கா கடத்தி வந்தவர்ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் பலமநேர் அடுத்த தண்டுமட்டம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 48 என்றும், இவர் பெங்களூரில் இருந்து வெங்காயம் மூட்டைகளை கொண்டு வந்து சரக்கு ஆட்டோவில் வெங்காயம் கொட்டி அதன் அடியில் குட்கா பொருட்கள் பதுக்கி, திருத்தணி, கனகம்மாசத்திரம் பகுதி கிராம கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.