/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.3,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல்
/
ரூ.3,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல்
ADDED : ஆக 31, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, கன்னிகைப்பேர் சின்ன காலனியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
பெரியபாளையம் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பேச்சியம்மாள், 46 என்பவர் நடத்தி வந்த கடையில் சோதனை செய்ததில், ஹான்ஸ், 10, கூல்லிப், 10, விமல், 60, சுவாகட், 15 என மொத்தம், 95 பாக்கெட்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இவற்றின் மதிப்பு 3,000 ரூபாய் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பேச்சியம்மாளை கைது செய்தனர்.