/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திசை காட்டும் பலகை வைப்பதில் குளறுபடி
/
திசை காட்டும் பலகை வைப்பதில் குளறுபடி
ADDED : ஜூன் 24, 2024 04:47 AM

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், கவரைப்பேட்டையில் இருந்து திடீர் நகர் வரையிலான, 10 கி.மீ., சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை மாநில நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை பணிகள் முடிந்த நிலையில், அந்த சாலையின் முக்கிய சந்திப்புகளில் ஊர் பெயர் மற்றும் அங்கிருந்து பிரியும் ஊர்களின் திசை மற்றும் துாரத்தை தெரிவிக்கும் ஒளிரும் பலகைகள் நடும் பணி நடந்து வருகிறது.
குருவராஜகண்டிகை சந்திப்பில், பில்லாக்குப்பம் கிராமத்திற்கு தவறான திசையை காட்டும் அறிவிப்பு பலகை நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதி மக்கள், பலகையில் திசை தவறாக இருக்கிறது என்றும் இந்த பலகை எதிர் திசை சாலையின் ஓரம் வைக்க வேண்டியது என்றும் தெரிவித்தனர்.
பலகைகளை நடும் வேலையை மேற்கொண்ட தொழிலாளர்களுக்கு திசைகள் தெரியாததால், சிறிது நேரம் விழி பிதுங்கி நின்றனர். அங்கிருந்த அனைவரும் தெரிவித்ததால், சிமென்ட் கலவை போடும் பணிகளை நிறுத்தி, அந்த அறிவிப்பு பலகைகளை கொண்டு வந்த வாகனத்தில் எடுத்து சென்றனர்.
இதுபோன்று திசை காட்டும் அறிவிப்பு பலகை வைக்கும்போது, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அலுவலர் அல்லது ஊழியர் உடன் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் போனால் இதுபோன்ற குளறுபடிகளால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைய செய்யும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.