/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வி.எம்.நகரில் பாதாள சாக்கடை அடைப்பு துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் கடும் அவதி

ADDED : ஆக 21, 2024 11:19 PM

திருவள்ளூர்:வி.எம்.நகரில் பாதாள சாக்கடை புதை குழாயில் அடைப்பு காரணமாக, கழிவு நீர் சாலையில் குளமாக தேங்கி உள்ளது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வி.எம்.நகர் விரிவாக்க பகுதியான, கணபதி நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாதாள சாக்கடை புதைவழி குழாய் வாயிலாக, கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், கணபதி நகர் சாலையில், நான்கு இடங்களில் பாதாள சாக்கடை நிரம்பி, கழிவு நீர் சாலையில் பரவி வருகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன், குளம் போல் தேங்கிய கழிவு நீரால், துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடையில் கொசு உற்பத்தியாக டெங்கு, மலேரியா போன்ற நோய்களையும் பரப்பி வரும் அபாயம் உள்ளது.
எனவே, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை புதை குழாய் அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.