/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் ஓட்டு எண்ணும் மையத்தில் தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு
/
திருவள்ளூர் ஓட்டு எண்ணும் மையத்தில் தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு
திருவள்ளூர் ஓட்டு எண்ணும் மையத்தில் தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு
திருவள்ளூர் ஓட்டு எண்ணும் மையத்தில் தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு
ADDED : மே 08, 2024 12:10 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தனித்தொகுதிக்கான ஓட்டுப்பதிவு கடந்த மாதம், 19 ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டு இயந்திரங்கள் திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
வரும் 4 ம் தேதி ஓட்டுகள் எண்ணிக்கை நடைபெற உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதாசாஹூ நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள், ஆவடி துணை ஆணையர் ஐமன்ஜமால், ஆவடி மாநகராட்சி கமிஷனர் ஷேக்அப்துல் ரகுமான் பொன்னேரி சப் - கலெக்டர் வாகேசங்கத் பல்வந்த் உள்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.