sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எஸ்.ஆர்.எம்.,மில் வீரர்கள் ஒதுக்கீடில் சேர அழைப்பு

/

எஸ்.ஆர்.எம்.,மில் வீரர்கள் ஒதுக்கீடில் சேர அழைப்பு

எஸ்.ஆர்.எம்.,மில் வீரர்கள் ஒதுக்கீடில் சேர அழைப்பு

எஸ்.ஆர்.எம்.,மில் வீரர்கள் ஒதுக்கீடில் சேர அழைப்பு


ADDED : மார் 09, 2025 02:58 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி யில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு பிரிவில் மாணவ - மாணவியரை சேர்ப்பதற்கான தேர்வு முகாம், அக்கல்லுாரிவாளகத்தில் நடக்கிறது. முகாம், ஏப்., 7ல் துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.

பொறியியல், மேலாண்மை, அறிவியல்மற்றும் மனிதநேயம்மற்றும் சட்டம், ஹோட்டல் மேலாண்மை பிரிவுகளில் சேர விரும்புவோர்பங்கேற்கலாம்.

ஏப்., 7ல் இருபாலருக்கான சதுரங்கம் மற்றும்நீச்சல்; 8ல் கிரிக்கெட், இருபாலருக்கும் பால் பேட்மின்டன்; 9ல்டென்னிஸ், தடகளம், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ்; 10ல் இரு பாலருக்கான கூடைப்பந்து, கால்பந்து, வாள் வீச்சு, ஜூடோ போட்டி தேர்வுகள் நடக்கின்றன.

தொடர்ந்து, 11ம் தேதி, கபடி, வில்வித்தை,பளூத்துாக்குதல், பாக்சிங், வாலிபால்; 12ல் ஹாக்கிபோட்டிகள் நடக்கின்றன.

உரிய சான்றிதழ்களுடன்தேர்வு நடக்கும். காட்டா ங்கொளத்துார் வளாகத்தில் காலை 8:00 மணிக்கு நேரடியாக பங்கேற்கலாம்.

விபரங்களுக்கு 97911 15678, 87600 62211, 98423 64483 ஆகிய எண்களில் தொடர்புக்கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படுவோருக்கு, இலவச கல்வி, விடுதி வசதி உள்ளிட்டவை வழங்கப் படும் என, கல்லுாரியின் நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.






      Dinamalar
      Follow us