/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரம்மியில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை
/
ரம்மியில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை
ADDED : மார் 31, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜன், 29; ஐ.டி., ஊழியர். பெருங்குடியில், நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு, ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் பணம் இழந்த குருராஜன், கடனாளியாகவும் மாறியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

