/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிளாம்பாக்கம் - திருவண்ணாமலை இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
/
கிளாம்பாக்கம் - திருவண்ணாமலை இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
கிளாம்பாக்கம் - திருவண்ணாமலை இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
கிளாம்பாக்கம் - திருவண்ணாமலை இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
ADDED : ஏப் 22, 2024 06:44 AM
கூடுவாஞ்சேரி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, கிளாம்பாக்கம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
நாளை செவ்வாய்க்கிழமை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதற்காக, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, பக்தர்கள் செல்வது வழக்கம்.
இதனை கருத்தில் கொண்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று, 527 சிறப்பு பேருந்துகளும், நாளை 628 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், இன்றும் நாளையும் 910 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வாயிலாக, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணியர் சுலபமாக சென்றுவர வசதியாக, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு, முன்பதிவு வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்பட உள்ளன. இங்கு பயணியர் வருகையை தொடர்ந்து கண்காணித்து, சிறப்பு பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பிய உடன், விரைந்து செல்வதற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், திருவண்ணாமலைக்கு சென்று பயணியரை இறக்கி விட்டு, விரைந்து கிளம்பாக்கத்திற்கு திரும்புவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சிரமம் இன்றி சென்று வருவதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

