/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நகருக்குள் பேருந்துகள் இயக்க கும்மிடி பயணியர் கோரிக்கை
/
நகருக்குள் பேருந்துகள் இயக்க கும்மிடி பயணியர் கோரிக்கை
நகருக்குள் பேருந்துகள் இயக்க கும்மிடி பயணியர் கோரிக்கை
நகருக்குள் பேருந்துகள் இயக்க கும்மிடி பயணியர் கோரிக்கை
ADDED : மே 23, 2024 12:04 AM
கும்மிடிப்பூண்டி:சென்னை, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திர மாநிலத்திற்கு, தினமும் 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன், அனைத்து பேருந்துகளும், கும்மிடிப்பூண்டி நகருக்குள் இயக்கப்பட்டன.
அப்போது, இரு ரயில்வே மேம்பால பணிகளுக்காக பேருந்துகள் அனைத்தும் புறவழிச்சாலை வழியாக இயக்கப்பட்டது. அதன்பின், மேம்பால பணிகள் முடிந்து எட்டு ஆண்டுகளாகியும், நகருக்குள் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.
கடந்த 2021ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், கும்மிடிப்பூண்டி நகர் பகுதி வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. மூன்று மாதம் மட்டுமே நகருக்குள் பேருந்து சேவை நீடித்தது.
அதன்பின், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் பஜார் பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருதி, பேருந்து ஓட்டுனர்கள் நகருக்குள் செல்வதை தவிர்த்தனர்.
மீண்டும் பழையபடி புறவழிச்சாலை வழியாக பேருந்துகள் சென்று வருகின்றன. இதனால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் பேருந்து நிலையம் இருந்தும் பயனற்ற நிலையில் உள்ளது.
சென்னை செல்லும் பயணியர் பேருந்து பிடிக்க புறவழிச்சாலை செல்ல வேண்டியிருப்பதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டி பேருந்து பயணியரின் நலன் கருதி, பஜார் பகுதியில் போக்குவரத்தை சீர்செய்து, நகருக்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

