/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை மருத்துவ சேவை நடமாடும் வாகனம் துவக்கம்
/
கால்நடை மருத்துவ சேவை நடமாடும் வாகனம் துவக்கம்
ADDED : ஆக 28, 2024 07:41 PM
திருவள்ளூர்:கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவையை, கலெக்டர் துவக்கி வைத்தார்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ், நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தட வாகன சேவை துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
ஒரு லட்சம் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு நடமாடும் கால்நடை மருந்தகம் வீதம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு மொத்தம் 14 ஒன்றியத்திற்கும், ஐந்து நடமாடும் கால்நடை மருந்தக வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சீனிவேலன், உதவி இயக்குனர்கள் உமா, சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.