/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வல்லுார் அணைக்கட்டில் ஓட்டை தண்ணீர் வெளியேறும் அவலம்
/
வல்லுார் அணைக்கட்டில் ஓட்டை தண்ணீர் வெளியேறும் அவலம்
வல்லுார் அணைக்கட்டில் ஓட்டை தண்ணீர் வெளியேறும் அவலம்
வல்லுார் அணைக்கட்டில் ஓட்டை தண்ணீர் வெளியேறும் அவலம்
ADDED : மார் 02, 2025 12:07 AM

மீஞ்சூர், மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள வல்லுார் அணைக்கட்டு, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மழைக்காலங்களில் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், மீஞ்சூரை சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வல்லுார் அணைக்கட்டு நிரம்பி வழிந்தது.
கான்கிரீட் சேதம்
மழைக்காலம் முடிந்தும், கடந்த மாதம் வரை தொடர்ந்து அணைக்கட்டில் இருந்து உபரிநீர் வெளியேறியபடி இருந்தது. தற்போது, ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், உபரிநீர் வெளியேறுவதும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அணைக்கட்டின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு ஓட்டைகள் வழியாக தேங்கியுள்ள தண்ணீர் வெளியேறி வீணாகிறது. அணைக்கட்டின் முன்பகுதியில் உள்ள கான்கிரீட் தரைத்தளமும் சேதமடைந்து உள்ளது. இதனால், அணைக்கட்டின் உறுதித்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
அணைக்கட்டு பகுதி பராமரிப்பின்றி கிடப்பது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கோரிக்கை
கோடைகாலம் துவங்கிய நிலையில், அணைக்கட்டில் தேங்கியுள்ள தண்ணீரை பாதுகாக்கும் வகையில், தேவையான சீரமைப்பு பணிகளை உடனடியாக நீர்வளத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.