/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'மனசாட்சிப்படி ஓட்டு போடுவோம்' விழிப்புணர்வு பிரசாரத்தில் கோஷம்
/
'மனசாட்சிப்படி ஓட்டு போடுவோம்' விழிப்புணர்வு பிரசாரத்தில் கோஷம்
'மனசாட்சிப்படி ஓட்டு போடுவோம்' விழிப்புணர்வு பிரசாரத்தில் கோஷம்
'மனசாட்சிப்படி ஓட்டு போடுவோம்' விழிப்புணர்வு பிரசாரத்தில் கோஷம்
ADDED : மார் 26, 2024 10:25 PM

பொன்னேரி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டசபை தொகுதியில், ஆண்கள், 1,25,362, பெண்கள், 1,31,296, திருநங்கைகள், 29, என மொத்தம், 2,55,687 வாக்காளர்கள் ஓட்டுபோட உள்ளனர்.
நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நேற்று பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பொன்னேரி தாசில்தார் மதிவாணன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கனகவல்லி, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.
பொன்னேரி அரசு கலைக்கல்லுாரி மாணவர்களுடன் பேரணியாக சென்று, பொதுமக்களிடம் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியின்போது, 'இது தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா', 'மனதில் உறுதி வேண்டும், அனைவரும் நேர்மையாகவும், மனசாட்சிப்படியும் ஓட்டுப்போடுவோம்' என கோஷம் எழுப்பியபடி சென்றனர்.
பொன்னேரி சப் -கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதியதேரடி தெரு, பழைய பஸ் ஸ்டாண்டு வழியாக சென்றது.

