/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இயந்திரம் கோளாறு: பல இ டங்களில் ஓட்டுப்பதிவில் தாமதம்
/
இயந்திரம் கோளாறு: பல இ டங்களில் ஓட்டுப்பதிவில் தாமதம்
இயந்திரம் கோளாறு: பல இ டங்களில் ஓட்டுப்பதிவில் தாமதம்
இயந்திரம் கோளாறு: பல இ டங்களில் ஓட்டுப்பதிவில் தாமதம்
UPDATED : ஏப் 20, 2024 01:22 AM
ADDED : ஏப் 20, 2024 01:14 AM

திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டசபையில், ஆண்கள், 1,25,362, பெண்கள், 1,31,296, திருநங்கைகள், 29, என மொத்தம், 2,55,687 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களுக்காக, 311 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை போட்டு ஜனநாயக கடமையை செய்தனர்.
பொன்னேரி ஜெயகோபால் கரடியோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயந்திரம் பழுதானதால், காலையில் ஓட்டுப்பதிவு துவங்கவில்லை.
மாதிரி ஓட்டு போடும்போது இயந்திரம் சரிவர இயங்காத நிலையில், மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு, 40 நிமிட தாமத்துடன் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
அதேபோன்று, மீஞ்சூர் பகுதியில் உள்ள புங்கம்பேடு, அத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதால், 15 நிமிடங்கள் தாமதத்துடன் ஓட்டுப்பதிவு நடந்தது.
பழவேற்காடு மீனவ கிராமங்களில் மீனவர்கள் ஆர்வமாக சென்று ஓட்டுப்பதிவு செய்தனர்.
நகர பகுதிகளில் இருப்பவர்கள் வெயிலை காரணமாக்கி வீடுகளில் முடங்கி கிடந்தனர். கிராமப்பகுதிகளில், வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டுப்பதிவு செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 330 ஓட்டுச்சாவடிகளில் காலை நேரத்தில் மந்தமாக துவங்கிய ஓட்டுப்பதிவு பின்னர் வேகம் எடுத்தது. பிற்பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சுட்டெரித்ததால், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதன்பின் மாலை நேரத்தில் மீண்டும் வாக்காளர்கள் வர துவங்கினர். ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் ஒட்டுப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் பழுதானது. பின்னர் பழுது சரி செய்து ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே பூவலை கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடி எண்:13ல், ஓட்டுப்பதிவு துவங்கும் முன் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின் பழுது சரி செய்யப்பட்டு ஓட்டுப்பதிவு துவங்கியது.
இதனால், 45 நிமிடங்கள் கால தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடி எண்: 182ல், காலை 11:00 மணியளவில், 228 ஓட்டுகள் பதிவான நிலையில் விவிபேட் பழுதானது. அதற்கு 'சீல்' வைத்து, மாற்று 'விவிபேட்' பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு துவங்கியது.
இதனால், 30 நிமிடங்கள் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.
கவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தில், ஓட்டுச்சாவடி எண்: 170ல், நேற்று மதியம், 493 ஓட்டுகள் பதிவான நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. பழுது சரி பார்த்தபின், 30 நிமிடங்கள் கழித்து ஓட்டுப்பதிவு மீண்டும் நடைபெற்றது.
l அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்டப் திருத்தணி சட்டசபை தொகுதியில் நேற்று காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.
மொத்தம் உள்ள, 330 ஓட்டுச் சாவடிகளில், 15க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் இயந்திரங்கள் அடிக்கடி பழுதானதால், வாக்காளர்கள் அரைமணி நேரம் காத்திருந்து ஓட்டளித்தனர்.
திருத்தணி ஆலமரம் தெரு, காந்தி ரோடு ஆகிய இடங்களில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பத்து ஓட்டுச்சாவடிகளில் , 3 ஓட்டுச்சாவடிகளில் இயந்திரம் பழுதானதால், அரைமணி நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.
திருத்தணி முருகப்பநகர் பள்ளியில், ஓட்டு இயந்திரத்தில் பட்டனை மூதாட்டி ஒருவர் அழுத்தமாக அழுத்தியதால் பட்டன் வேலை செய்யவில்லை. உடனடியாக தொழிற்நுட்ப பொறியாளர் வரவழைக்கப்பட்டு, அரைமணி நேரத்தில் சீரமைத்து, மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
திருத்தணி நகராட்சியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் மதியம், 12:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை வழக்கத்திற்கு மாறாக வெயில் கொளுத்தியதால் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வராமல் இருந்ததால் வெறிச்சோடி கிடந்தது.
மாலை, 5:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.
மாதிரி ஓட்டுப்பதிவு மையம்
கோரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஓட்டுச் சாவடியில், மாதிரி ஓட்டுச்சாவடி அமைத்து, வாக்காளர்களை திருமணத்திற்கு அழைப்பது போல் வாழைமரம் மற்றும் தோரணங்கள் கட்டியும் அலங்கரிக்கப்பட்டது. இதுதவிர, வாக்காளர்கள் ஓட்டு போட்டவுடன் 'செல்பி' எடுப்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. இது வாக்காளர்களை மிகவும் கவர்ந்தது.
-திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பம்கண்டிகை, ஆற்காடு குப்பம், காஞ்சிப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று ஓட்டுப்பதிவின் துவக்கத்தில் இயந்திரம் பழுதானது.
இதனால் குப்பம்கண்டிகையில் ஒரு மணி 30 நிமிடமும், ஆற்காடு குப்பத்தில் 40 நிமிடமும், காஞ்சிப்பாடியில் 30 நிமிடமும் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.
பழையனூர் கிராமத்தில் மதியம் 12.30 முதல் 1.10 மணி வரை 40 நிமிடம் இயந்திர பழுதால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. பின் இயந்திரம் சீரமைத்து ஓட்டுப்பதிவு நடந்தது.
இதேபோல், சென்னை யிலும் பல இடங்களில், உள்ள சாவடிகளில் ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுதான தால், ஓட்டுப்பதிவு தாமதமானது.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட
குப்பம்கண்டிகை, ஆற்காடு குப்பம், காஞ்சிப்பாடி உள்ளிட்ட கிராமங்களில்
நேற்று ஓட்டுப்பதிவின் துவக்கத்தில் இயந்திரம் பழுதானது.
இதனால்
குப்பம்கண்டிகையில் ஒரு மணி 30 நிமிடமும், ஆற்காடு குப்பத்தில் 40
நிமிடமும், காஞ்சிப்பாடியில் 30 நிமிடமும் ஓட்டுப்பதிவு தாமதமாக
துவங்கியது.
பழையனூர் கிராமத்தில் மதியம் 12.30 முதல் 1.10 மணி வரை
40 நிமிடம் இயந்திர பழுதால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. பின் இயந்திரம்
சீரமைத்து ஓட்டுப்பதிவு நடந்தது.
ஆற்காடு குப்பத்தில் காலை
ஓட்டுப்பதிவு தாமதமானதால் வெயிலின் தாக்கத்தால் பங்களா தோட்டம் பகுதியை
சேர்ந்த மோகன் 50 என்பவர் மயக்கமடைந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை
அளிக்கப்பட்டது.
- நமது நிருபர் குழு-

