/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பைக்'கிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
/
'பைக்'கிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : பிப் 21, 2025 10:25 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 40. இவர், அரக்கோணம் தாலுகா இச்சிபுத்துாரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, தன் இருசக்கர வாகனத்தில் குருவராஜபேட்டை பஜார் வீதிக்கு சென்று விட்டு, வீட்டிற்குச் சென்றார்.
சாமந்திபுரம் கிராமம் அருகே வந்த போது, திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக நேற்று, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.