ADDED : செப் 05, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த மாமண்டூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 40; கட்டட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் கட்டட வேலைக்காக, இருசக்கர வாகனத்தில் திருத்தணிக்கு சென்றார்.
மாலை 6:00 மணிக்கு வேலை முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, மாமண்டூர் அருகே, நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.