/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 'மொபைல்' வாகனம் துவக்கம்
/
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 'மொபைல்' வாகனம் துவக்கம்
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 'மொபைல்' வாகனம் துவக்கம்
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 'மொபைல்' வாகனம் துவக்கம்
ADDED : ஆக 29, 2024 11:40 PM

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில், 23 கால்நடை மருந்தகங்கள், 6 கிளை நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் அனைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொலை துார கிராம விவசாயிகள் தங்களது கால்நடை களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, நடமாடும் வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரில் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
இதற்காக திருத்தணி கோட்டத்திற்கு இரு நடமாடும் வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நேற்று முதல் நடமாடும் வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரில் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திருத்தணி கால்நடை துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது:
திருத்தணி, திருவாலங்காடு ஆகிய இரண்டு ஒன்றியங்கள் மற்றும் பூண்டி ஒன்றியத்தில் ஒரு சில கிராமங்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
தினமும் இரு கிராமங்கள் வீதம், காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை கால்நடைகளுக்கு சுழற்சி முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.
பின், அவசர சிகிச்சை தேவைப்படும் விவசாயிகள் 79048 61901 என்ற மருத்துவர் மொபைல் எண் அல்லது அவசர தொலை பேசி- 1962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் வாகனம் மூலம் உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

