/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் அரசு கல்லுாரி அமைச்சரிடம் எம்.பி., மனு
/
திருவள்ளூரில் அரசு கல்லுாரி அமைச்சரிடம் எம்.பி., மனு
திருவள்ளூரில் அரசு கல்லுாரி அமைச்சரிடம் எம்.பி., மனு
திருவள்ளூரில் அரசு கல்லுாரி அமைச்சரிடம் எம்.பி., மனு
ADDED : பிப் 25, 2025 07:53 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க, கல்வி அமைச்சரிடம் காங்., -- எம்.பி., மனு அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்றொன்று, திருத்தணியில் முருகன் கோவில் கட்டுப்பாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இதைத் தவிர, மாவட்ட தலைநகரான திருவள்ளூர் உட்பட, மாவட்டத்தில் வேறு எங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி எதுவும் இல்லை.
இதனால், இம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் உயர் கல்வி கற்க, சென்னைக்கு செல்ல வேண்டி உள்ளது. கிராமப் பகுதிகளைக் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெற்றோர், தங்கள் பெண் குழந்தைகளை சென்னைக்கு அனுப்ப தயக்கம் காட்டி, அவர்களின் உயர் கல்வி கனவை நிராகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் லோக்சபா தொகுதி காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில், நேற்று, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவிசெழியனை சந்தித்து, திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைத்து தர வேண்டி, மனு அளித்தார்.