/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய குடற்புழு நீக்க நாள் ரத்ததான முகாம்
/
தேசிய குடற்புழு நீக்க நாள் ரத்ததான முகாம்
ADDED : ஆக 23, 2024 08:20 PM
திருவள்ளூர்:திருமழிசை அடுத்த பழஞ்சூர் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பூந்தமல்லி மாவட்ட சுகாதார அலுவலர் ஜெ.பிரபாகரன் தலைமையில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது.
லயோலா தொழில்நுட்ப கல்லுாரி துணை முதல்வர் பிரபு முன்னிலையில் கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.
முகாமில் தாய்சேய் நல அலுவலர் சங்கரி, மாவட்ட மலேரியா அலுவலர் ஆனந்த், வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிசந்திரன் உட்பட சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர்.
முகாமில் பங்கேற்ற மாணவர்களிடமிருந்து 35 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.