/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிகாரிகள் ஆய்வுக்கு பின் புத்துயிர் பெறும் கடம்பத்துார் ரயில்வே சுரங்கப்பாதை பணி

UPDATED : டிச 20, 2024 02:45 AM
ADDED : டிச 20, 2024 12:12 AM

கடம்பத்துார், கடம்பத்துார் ரயில் நிலைய பகுதியில், 2015ல், 14.5 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கிய ரயில்வே மேம்பாலம் பணிகள் ஆறு ஆண்டுகளுக்குப் பின் நிறைவடைந்து, 2022ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
இதனால், கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டதால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், 5.50 கோடி ரூபாய் மதிப்பீல், 300 அடி நீளம், 16 அடி அகலம், 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்த நிலையில், சுரங்கப்பாதை பணிகள் இரு ஆண்டுகளாகியும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
கடவுப்பாதையை ஆபத்தான முறையில் கடந்து வருவதால் பகுதிவாசிகள் அடிக்கடி ரயிலில் அடிபட்டு பலியாகி வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப்பொறியாளர் சந்திரசேகர் மற்றும் ரயில்வேத் துறை பொறியாளர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் ரயில்வே துறையினர் வரைபடம் வாயிலாக சுரங்கப்பாதை பணிகள் நடைபெற உள்ள பகுதிகளை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின், சுரங்கப்பாதை பணிகள் விரைவில் துவங்கப்படும் எனவும், தெரிவித்தனர்.