/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாய பணியில் ஆர்வமுடன் வடமாநில தொழிலாளர்கள்
/
விவசாய பணியில் ஆர்வமுடன் வடமாநில தொழிலாளர்கள்
ADDED : செப் 15, 2024 11:35 PM

பொன்னேரி: பொன்னேரி வட்டத்தில் உள்ள சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்களில், 44,000 ஏக்கர் பரப்பில் சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்படுகிறது.
இந்த ஆண்டு சம்பா பருவத்திற்காக கிராமங்களில் நடவுப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. விவசாய பணிகளுக்கு உள்ளூரில் ஆட்கள் கிடைப்பதில்லை. ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து விவசாய கூலித்தொழிலாளர்கள் தரகர்கள் வாயிலாக வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த சில தினங்களாக தினமும் பொன்னேரி ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் வந்து இறங்குகின்றனர். டிராக்டர் மற்றும் வேன்களில் காத்திருக்கும் விவசாயிகள் இவர்களை அழைத்து செல்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஆந்திர, வடமாநில தொழிலாளர்கள் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் சுற்றியுள்ள கிராமங்களில் முகாமிட்டு விவசாய பணிகளில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்.
இவர்கள், 15-- 20பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து, விவசாயிகள் தெரிவிக்கும் வயல்களில் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர்.
அதிகாலையில் எழுந்து நாற்று பறிப்பது, விளைநிலங்களுக்கு கொண்டு செல்வது, நேர்த்தியாக நடவு செய்வது என, ஒவ்வொரு குழுவும், தினமும், ஐந்து ஏக்கர் பரப்பில் நடவுப்பணிகளை மேற்கொள்கிறது.
ஒரு ஏக்கருக்கு, 4,200 - 4,500 ரூபாய் வசூலிக்கின்றனர். அதிகாலையில் எழுந்து, காலை, மதியம் இருவேளைக்கு உணவு தயாரித்து எடுத்துக்கொண்டு நடவுப்பணிகளுக்கு சென்று விடுகின்றனர். காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை சலிப்பின்றி வேலை பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.