/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பலே' திருடன் கைது 5 பைக்குகள் பறிமுதல்
/
'பலே' திருடன் கைது 5 பைக்குகள் பறிமுதல்
ADDED : மே 02, 2024 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழுகிணறு:ஏழுகிணறு, வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 40; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த, இவரது பைக் திருடு போனது. இது குறித்து ஏழுகிணறு போலீசார் விசாரித்தனர்.
இதில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஹரிஹரன் பஜார் தெருவைச் சேர்ந்த அப்துல் அஜீஸ், 32, பைக்கை திருடியதும், இவர் மீது ஏற்கனவே நான்கு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்து, ஐந்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

