/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று பவித்ர உற்சவம்
/
வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று பவித்ர உற்சவம்
ADDED : ஆக 18, 2024 11:00 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில், இன்று துவங்கி வரும் 25ம் தேதி வரை பவித்ர உற்சவம் நடைபெறுமென கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமும் நடைபெறும் பூஜைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்காக இந்த உற்சவம் நடக்கிறது.
இதை முன்னிட்டு, தினமும் காலை சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம் சாத்துமறை நடந்தது. மாலை பெருமாள் மாடவீதி புறப்பாடும், இரவு சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாத்துமறை நடைபெறும்.
மேலும் கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை காலை, 9:30 மணி முதல், 11:00 மணி வரையும், இரவு 7:00 மணி முதல், 8:30 மணி வரையும் நடைபெறும். உற்சவர் வைத்திய வீரராகவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும்.
இந்த 7 நாட்கள் உற்சவர் வீரராகவப் பெருமாள் மாலை, 5:30 மணியளவில் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருவார்.

